சேலம் அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் மட்டுமே பிறந்த ஆண் குழந்தை, மாஸ்க் அணிந்த பெண்ணால் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தையை கடத்திய அந்த பெண், சேலம் வாழப்பாடி அருகிலுள்ள காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என அடையாளம் காணப்பட்டார்.
தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு, கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர், மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை கைது செய்தனர். விசாரணையில், வினோதினிக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடியதாக தெரியவந்தது.
அவர் குழந்தையை சிகிச்சைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
Leave a Reply