மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் M. முகமது செரீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வரும் 19.09.2024 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்கும் முப்பெரும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் அவை தலைவர் சேக் தாவூத், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், சேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.