கலாமண்டலத்தில் முதல்முறையாக அசைவ உணவு !

கேரளத்தின் புகழ்பெற்ற கலாமண்டலத்தில் முதன்முறையாக அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.

கலாமண்டலத்தில் தினசரி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறி, மாணவர்கள் அசைவ உணவு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலாமண்டல நிர்வாகம், கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த புதன்கிழமையில் (ஜூலை 10) சிக்கன் பிரியாணி வழங்கியது.

மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்ட பிறகும், இதுவரை எந்தவிதமான புகார்களும் கிடைக்காததால், எதிர்காலத்தில் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அசைவ உணவு வழங்குவது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கலாமண்டல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கலாமண்டலத்தில் கதகளி, மோகினியாட்டம், துள்ளல், குட்டியாட்டம், பஞ்சவாத்தியம், கர்நாடக இசை, மிருதங்கம் போன்ற பல்வேறு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க  அதிக நீரை பயன்படுத்தினால் இனி அபராதம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனைத்து குடிமக்களுக்கும் தினசரி சிரிப்பு.......

Fri Jul 12 , 2024
சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வில், தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. சிரிப்பு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை பெருமளவில் குறைக்கின்றது எனவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, யமகட்டா மாகாணத்திhttps://www.dinamalar.com/news/world-tamil-news/laugh-a-day-for-health-benefits-japans-yamagata-passes-bill-to-reduce-risk-of-heart-disease/3672614ல் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாளை சிரிப்பு தினமாகக் கடைபிடித்து, அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் […]
Screenshot 20240712 173813 inshorts - அனைத்து குடிமக்களுக்கும் தினசரி சிரிப்பு.......

You May Like