அனைத்து குடிமக்களுக்கும் தினசரி சிரிப்பு…….

சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வில், தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. சிரிப்பு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை பெருமளவில் குறைக்கின்றது எனவும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, யமகட்டா மாகாணத்திhttps://www.dinamalar.com/news/world-tamil-news/laugh-a-day-for-health-benefits-japans-yamagata-passes-bill-to-reduce-risk-of-heart-disease/3672614ல் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாளை சிரிப்பு தினமாகக் கடைபிடித்து, அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது தனிநபர் உரிமையாகும், அதைக் கட்டாயமாகச் செய்ய சொல்ல முடியாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க  இனி 2 மணி நேரத்தில் பேன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்...

Sat Jul 13 , 2024
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களுக்கு நினைவாக ஒரு ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு கடந்த வருடம் கோரிக்கை வைத்தது. இந்த நினைவு நாணயத்தை, கலைஞர் கருணாநிதியின் நூற்றாவது பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அந்நாளில் நாணயத்தை வெளியிட முடியவில்லை. சமீபத்தில், […]
karunanidhi coin | கலைஞர் கருணாநிதிக்கு ரூ.100 சிறப்பு நாணயம்...