ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள முச்சுமர்ரி கிராமத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது மாணவி ஒருவர் கடந்த ஞாயிறு அன்று அதே ஊரில் உள்ள பூங்காவில் விளையாண்டு கொண்டிருந்தார்.
அந்த மாணவி படிக்கும் பள்ளியில் படித்து வரும் 12 வயது மாணவர்கள் இரண்டு பேர், 13 வயது மாணவன் ஒருவன் ஆகியோர் விளையாட்டில் ஆர்வமாக இருந்த அந்த மாணவியை ஓடிப் பிடித்து விளையாடலாம் என்று கூறி கிராமத்திற்க்கு வெளியில் அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த மாணவியை மறைவான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தப்பி செல்ல முயன்றுள்ளனர் அவர்கள்.
நடந்த சம்பவங்கள் மொத்தத்தையும் பெற்றோரிடம் கூறி விடுவேன் என்ற மாணவி கூறிய நிலையில் விஷயம் வெளியே வந்து விடும் என்ற கருதிய சிறுவர்கள் மூன்று பேரும் அந்த மாணவியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசி தப்பி சென்று விட்டனர்.
மகளை காணாமல் தவித்த அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அந்த மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே மோப்பநாய் உதவியுடன் மாணவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
கிராமத்திற்கு வந்து சேர்ந்த போலீஸ் மோப்பநாய் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இரண்டு பேரை கவ்வி பிடித்ததுடன் அவர்களுடைய வீட்டின் முன் சென்று படுத்துக் கொண்டது.
அந்த மாணவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது இன்னொரு மாணவன் ஆன சிறுவனும் தங்களுடன் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
விசாரணையின் போது அவர்கள் மூன்று பேரும் அளித்த தகவலின் அடிப்படையில் மானவி உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மூன்று சிறுவர்கள் கைது
Follow Us
Recent Posts
-
ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
-
கோவையில் ஓணம் விருந்தில் 22 வகை உணவு, தங்க நாணய பரிசு!
-
27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகளை கோவையில் துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
-
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்: பொதுமக்களின் குறைகள் நீக்க நடவடிக்கை!
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
Leave a Reply