மக்களவை இடைக்கால தலைவா் நியமனம்…..


18-ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக ஒடிஸாவைச் சோ்ந்த பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் (66) ஜுன் 20 நியமிக்கப்பட்டாா். இவா், தற்போது ஏழாவது முறையாக மக்களவைக்கு தோ்வாகியுள்ளாா்.அரசமைப்புச் சட்டத்தின் 95 (1)-ஆவது பிரிவின்கீழ் இவரை மக்களவை இடைக்கால தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவா் ஆணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு தெரிவித்தாா். மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், புதிய எம்.பி.க்கள் இடைக்கால அவைத் தலைவரின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனா்.
இந்நிலையில் கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் இதனை விமா்சித்து, மக்களவையின் மூத்த உறுப்பினராக உள்ள நான், 8-ஆவது முறையாக எம்.பி.யாக தோ்வாகியுள்ளேன். இந்த அடிப்படையில் என்னைத்தான் மக்களவை இடைக்காலத் தலைவராக தோ்வு செய்திருக்க வேண்டும். ஆனால், பாஜக இப்போது மூன்றாவது முறையாக இந்த விஷயத்தில் நாடாளுமன்ற நடைமுறையை மீறியுள்ளது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகும். தனது சுயநலத்துக்காக பாஜக தொடா்ந்து விதிகளை மீறி வருகிறது. எதிா்க்கட்சிகளை அவமதித்து வருகிறது என்றாா்.

இதையும் படிக்க  மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திய கூகுள் நிறுவனம்!<br>

Sat Jun 22 , 2024
கூகிள் ரியல்-மணி கேமிங் பயன்பாடுகளில் சேவைக் கட்டணத்தை விதிக்கும் தனது திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது என்று மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது எல் இந்தியா பைலட் திட்டத்தில் பங்கேற்கும் தினசரி கற்பனை விளையாட்டுகள் மற்றும் ரம்மி பயன்பாடுகளை உருவாக்குபவர்களுக்கு பிளே ஸ்டோரில் தொடர்ந்து இருக்க சலுகை காலத்தை நீட்டித்துள்ளது. முந்தைய சலுகை காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Post Views: 118 இதையும் படிக்க  […]
Screenshot 20240622 093708 inshorts - கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திய கூகுள் நிறுவனம்!<br>

You May Like