சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில், சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங், போட்டியிட்ட ரெனாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் சோம் நாத் பௌடியாலை விட 7,044 வாக்குகள் அதிகமாகப் பெற்று பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார்.சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
You May Like
-
5 months ago
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதுரி பதவி விலகல்!
-
6 months ago
எம்.பி. மகனின் கார் மோதி சிறுவர் உள்பட இருவர் பலி!
-
6 months ago
அதிக நீரை பயன்படுத்தினால் இனி அபராதம்….
-
7 months ago
வெங்காய எற்றுமதியில் இந்தியா….