மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு டெல்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாதில் கைது செய்யப்பட்டாா்.திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயா்நீதிமன்றத்தில் கவிதா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.இந்த மனுக்கள் மீது பதிலளிக்க கோரி சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா, அடுத்த விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Follow Us
Recent Posts
-
“நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை”
-
அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.
-
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!
-
நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு
-
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…
Leave a Reply