
தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சௌதுரி விலகியது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்செயலாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து 35 நிமிடம் பேசிய ஒரு நாள் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில காங்கிரஸ் கமிட்டியுடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதிர் ரஞ்சன் சௌதுரி அறிவித்துள்ளார். இருப்பினும், அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெரியளவில் வெற்றிபெறாததை அடுத்து தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.ஆதிர் ரஞ்சன் சௌதுரி 2012 முதல் 2014 வரை ரயில்வே இணை அமைச்சராகழும், 2019 முதல் 2024 வரை மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார்.