,

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

IMG 20240823 120051 - 2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு,

யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். யார் தேவை – தேவை இல்லை என்று தீர்மானிப்பார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதை பொருள் கலாச்சாரம் தான். மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. வருங்கால சமுதாயத்தின்  சீரழிக்கும் செயல்.முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும் என்றார்.

சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு, அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்து கொள்வது இயற்கை. இதற்கு பழனிச்சாமி தடையாக இருக்கும் வரை இந்த முயற்சி பலிக்காது.

இதையும் படிக்க  கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அகழ்வாய்வில் கலப்பை கொழுமுனை கண்டுபிடிப்பு….

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கும். உறுதியாக அதில் வெற்றி பெறுவோம்.

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். பழனிச்சாமியின் தவறான நடவடிக்கையை புரிந்து கொண்டு – சுயநலத்தை புரிந்து கொண்டு இதற்கு தக்க முடிவு எடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் 2026 பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

திமுக தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள எது வேண்டும் என்றாலும் செய்வார்கள். அதைக் கேட்டால் ராஜதந்திரம் என்று கூறுவார்கள். பிஜேபி அரசியல் ரீதியாக திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை. மத்திய அரசிடம் போய் திமுக தாஜா செய்து குனிந்து – வளைந்து நிற்பதால் அவர்கள் வருகிறார்கள். அரசியல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அமமுக யாரை நம்பியும் தொடங்கவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts