Friday, January 24

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் கார்த்திக் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்றபோது உடுமலை பகுதியில் எதிர்பாராத விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்திருந்த கார்த்திக் ராஜா, தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை<br>

இவ்விளைச்சலையிலே, கார்த்திக் ராஜாவின் உடல் உறுப்புகள், கண்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை<br>
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை<br>
இதையும் படிக்க  பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *