பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், நகர மன்ற கூட்ட அரங்கில், தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆணையாளர் கணேசன் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் நகர மன்ற கூட்டமாகக் கருதப்படும் இக்கூட்டத்தில், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் கணேசனை வரவேற்று, அவருக்கு சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கினார்.
இக்கூட்டத்தில், பெரும்பாலான நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சியின் சொந்தமான கட்டிடங்கள் நீண்ட காலமாக ஏலம் விடப்படாமையால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, காந்தி வாரச் சந்தை உட்பட நான்கு இடங்களில் செயல்பட்டு வந்த கழிப்பிட வளாகங்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்படாமையால், அவற்றை சீரமைக்க வேண்டுமென, மேலும் சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாதமடைவதால் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ளம் பெருகுவதாக தெரிவித்தனர். இதற்கான பதிலளிக்கையிலும், நகராட்சி ஆணையாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த அனைத்து பணிகளும் நிறைவடையப்படும் என உறுதியளித்தார்.இதன் பின்னர், 70 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
மேலும், 12வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் பழனிச்சாமியின் மறைவை ஒட்டி, நகராட்சி வளாகத்தில் அவரது உருவப் படத்திற்கு, தலைவர், துணை தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், நகர மன்ற கூட்டத்தில், ஒருநிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் நகர மன்ற கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்…
Follow Us
Recent Posts
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
-
“ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை ஏற்க முடியாது: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தது இந்தியாவிற்கும் அவமானம் – தமிமூன் அன்சாரி”
-
ரயில்வே போராட்டத்தில் உயிர்நீத்த 17 ஊழியர்களுக்கு செவ்வணக்கம்: பழைய ஓய்வூதியம் மீட்பு கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Leave a Reply