சென்னை மாநகராட்சி பருவ மழையை எதிர்கொள்ள 36 படகுகள் வாங்கியது…

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி 36 சிறிய படகுகளை வாங்கியுள்ளது. இதனுடன், மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு 1 படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை காலத்தின்போது பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்க இந்த படகுகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/chennaicorp/status/1841511989530804641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841511989530804641%7Ctwgr%5E2d4ea5dbcfa276e0079708eddc495bda422a6f25%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.dinamani.com%2Ftamilnadu%2F2024%2FOct%2F03

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில், பருவ மழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மூடல் பயணிகள் அவதி....

Thu Oct 3 , 2024
கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி, , ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென ஒரு […]
IMG 20241003 WA0013 - பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மூடல் பயணிகள் அவதி....

You May Like