வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு !

Screenshot 20240725 132225 Gallery - வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு !

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு – வீட்டிலிருந்த உணவை எடுத்துச் சென்று வீட்டின் அருகில் நிதானமாக சாப்பிட்டு சென்ற திருடர்கள் .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் இளஞ்செழியன் இவருக்குமனைவி மற்றும் விவேக் விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர் .

இந்நிலையில் நேற்று இரவு தாயார் கீழ்வீட்டிலும் இளஞ்செழியன் மற்றும் அவரது இரு மகன்களும் மாடியிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டின் சமையல் அறையில் இருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று நிதானமாக சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

காலையில் பூட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன் பார்த்தபோது 30 பவுன் நகை  திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது ,இதனை தொடர்ந்து சமயபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

வீட்டினுள் புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள் சமையலறைக்குச் சென்று சமையலறையில் இருந்த உணவையும் விட்டு வைக்காமல் அருகினில் உள்ள வயல்வெளியில் அமர்ந்து சாப்பிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இதையும் படிக்க  டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *