மக்களவை தேர்தல்- தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…

*பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

*முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் உள்ள நிலையில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

*தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறும். வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 30 ஆயிரம் பேர் முன்பதிவு

Thu Apr 18 , 2024
*தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று 30 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். *மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின. சென்னையில் 684 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,621 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *நாளை தேர்தல் நடைபெற உள்ள […]
Screenshot 20240418 114943 Gallery - தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 30 ஆயிரம் பேர் முன்பதிவு

You May Like