தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 30 ஆயிரம் பேர் முன்பதிவு

Screenshot 20240418 114943 Gallery - தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 30 ஆயிரம் பேர் முன்பதிவு

*தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில்
இன்று 30 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

*மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின. சென்னையில் 684 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,621 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் 777 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 17 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஏப். 21-ம் தேதி ஞாயிறன்று 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

*முன்பதிவுக்கு tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *