தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல்

image editor output image524370575 1723536157325 - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

* ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* வாகன உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* எரிசக்தி துறையின் மூலமாக 3 முக்கிய கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் திட்டம், மற்றும் காற்றாலை திட்டத்தைப் புதுப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* ஈரோட்டில் ரூ.1707 கோடி மதிப்பில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்.

* புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* 2030-ம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தியை அடையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

* தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கவும், ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்களுக்கான தங்குமிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *