கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்: 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் ஒரு பார்வை” எனும் தலைப்பில் மூன்று நாட்கள் நீடிக்கும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.
இவ்விழாவில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ. வாசுகி தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா அனைவரையும் வரவேற்றார்.
பயிலரங்கத்தை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் கல்பனா சுரேந்தர்நாத் தொடங்கி வைத்தார். தனது உரையில், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி 25 ஆண்டுகளுக்கு முன்பு பயோடெக்னாலஜி பாடப்பிரிவை ஆரம்பித்ததைப் பற்றி பாராட்டினார். இதே கல்லூரியில் பயோடெக்னாலஜி படித்து தான் உயர்ந்த நிலைக்கு வந்ததாகவும், மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி. சங்கீதா நன்றி கூறினார்.