டொயோட்டா, மாருதி சுசுகி eVX அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனது முதல் மின்சார எஸ்யூவியை 2025 முதல் பாதியில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. இம்மின்சார எஸ்யூவி, சுஸுகியின் குஜராத் ஆலையில் தயாரிக்கப்படும். குறிப்பாக ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எஸ்யூவியின் வடிவமைப்பு டொயோட்டாவின் அர்பன் எஸ்யூவி கான்செப்ட்டில் இருந்து உத்வேகத்தைப் பெறுகிறது. 40PL எனப்படும் டொயோட்டாவின் எலக்ட்ரிக் ஸ்கேட்போர்டு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது 4,300 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் கொண்டிருக்கும், மேலும் இரண்டு எஸ்யூவிகளும் 2,700 மிமீ வீல்பேஸை பகிர்ந்து கொள்ளும்.
முன்புறம் C-வடிவ LED DRLகள், கிரில், சி-பில்லர்-இணைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள் ஆகியவை உள்ளன. அதேபோல் உள்ளகத்தில் மிதக்கும் சென்டர் கன்சோல், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 360 டிகிரி கேமரா, ADAS தொழில்நுட்பம் போன்ற சிறப்பம்சங்களுடன் சிரமமில்லாத இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX போல, டொயோட்டாவின் இந்த மின்சார எஸ்யூவியும் 60kWh பேட்டரியை உடையதாக இருக்கும். இதன் இயக்கவளமும் சுமார் 500 கிமீ வரை இருக்கும்.