நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!

img 20241111 wa00017116820061357064100 | நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!

உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது.இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது.

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றிய இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன், இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள், ஜெய்ஹிந்த முழக்கமிட்டு இந்திய இராணுவத்திற்கு மரியாதை செய்தனர்.

img 20241110 wa00566064423733985965290 | நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!
img 20241110 wa00247406545451421925151 | நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!


கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் 15″வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா கேம்ஃபோர்டியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.

உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது.இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டின் சிறப்புகளை ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்,அதே நேரத்தி்ல் இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருக்கிறது.

உலகில் வல்லரசான அமெரிக்கா நாட்டு மக்களின் தேசப்பற்று குறித்து எதிர்காலத்தில் காலத்தில் இந்திய நாடு வல்லரசாக மாறுவதற்கும் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் தேசப்பற்று முக்கியம் என்று கூறினார். தொடர்ந்து அவர் கேட்டு கொண்டதிற்கு இணங்க இந்திய இராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அரங்கில் கூடியிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று ஜெய் ஹிந்த் என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த மதிப்பெண்கள் மற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. டைனமிக்ஸ் 2024″எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ்  தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கிய – விழாவில்  மாணவ,மாணவிகள் இணைந்து நடத்திய  கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்...

Mon Nov 11 , 2024
பொள்ளாச்சி பாலக்காடு சாலை உடுமலை சாலை,மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனை அடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் உடுமலை சாலை, கோவை சாலையில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகில்  வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் […]
IMG WA jpg