ஆழியாறு அணையில் இருந்து1,006 கன அடி தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1,006 cubic feet of water released from the Azhiyar dam alerting the coastal people

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது அணையில் இருப்பு வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது அணையின் மொத்த உயரமான 120 அடியில் இன்று காலை 7:00 மணி நிலவரப்படி 119.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வரத்தாக உள்ளது

தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக 332 கன அடி நீரும் ஆற்றின் வழியாக 660 கன அடி உபரி நீரும்
அணையிலிருந்து வினாடிக்கு 1,006 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆழியாறு நீர் வழிப்பாதையில் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன முறையில் ஜாமின்  வழங்கிய நீதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம்: முன்னாள் ராணுவ மேஜர் கருத்து!

Mon Nov 11 , 2024
உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது.இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றிய இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன், இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள், ஜெய்ஹிந்த முழக்கமிட்டு இந்திய […]
IMG WA jpg