கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆழியார் அணை பகுதியில் 2பேர் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி சத்தம் போடுவதும் அவர்களை மீட்பதற்கு மத்திய ரிசர்வ் படை போலீஸ் கயிற்றை லாவகமாக தண்ணீரில் வீசி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வரும் விதம்,
தண்ணீரில் சிக்கிய நபர்களை வெளியே எடுத்து வரும் விதம் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது மழைவெள்ள காலங்களில் கைகளில் கிடைக்கும் தண்ணீர் காலி பாட்டில்களை இரும்பு ஆயில் டிரம்களை பயன்படுத்தி வெள்ளத்தில் மூழ்காமல் தண்ணீரில் நீந்தும் விதம், மழை வெள்ளம் தண்ணீர் அதிக ஆழமாக இருந்தால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது, தண்ணீரில் சிக்கி தத்தளிக்கும் நபரை ரப்பர் படகில் சென்று மீட்டு அந்த நபரை வெளியில் கொண்டு வரும் விதம் ஆகிய பயிற்சிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் 87 வீரர்களுக்கு ,7 பேர் கொண்ட பயிற்சியாளர்கள் ஆழியாறு அணை பகுதிக்குள் பரபரப்புடன் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளித்து அசத்தினார்கள். அந்த காட்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தியது.