இந்தியாவில் யுபிஐ சேவை மூலம் தினசரி லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி தனது யுபிஐ சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது.
வங்கியின் கணினி பராமரிப்பு பணிகளுக்காக, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23 ஆகிய தினங்களில் யுபிஐ சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மற்றும் நவம்பர் 23ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வங்கியின் யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறாது. இதனால், இந்த நேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்கப்பட்ட எந்த யுபிஐ சேவையையும் பயன்படுத்த முடியாது.