TVS மோட்டார் நிறுவனத்தின் புதிய ஜுபிடர் 110 இருசக்கர வாகனம் அறிமுகம்..!

IMG 20240827 WA0009 - TVS மோட்டார் நிறுவனத்தின் புதிய ஜுபிடர் 110 இருசக்கர வாகனம் அறிமுகம்..!

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் TVS மோட்டார் நிறுவனத்தின் புதிய ஜுபிடர் 110 இரு சக்கர வாகனத்தை பெனாய் ஆண்டனி (Commuter Marketing) மற்றும் பத்மநாபன் மண்டப விற்பனை மேலாளர் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்து TVS ஜூபிடர் 110 வாகனம் குறித்து விளக்கம் அளித்தனர்.அட்டகாசமான வண்ணங்களான டான் ப்ளூ மேட்,கேலக்டிக் காப்பர் மேட்,ஸ்டெர்லைட் ப்ளூ கிளாஸ்,டைட்டானியம் கிரே மேட்,லூனார் ஒயிட் கிளாஸ் மற்றும் மீட்யோர் கிளாஸ் காண்போரை கவர வைக்கும்.img 20240827 wa00081154949904135555336 - TVS மோட்டார் நிறுவனத்தின் புதிய ஜுபிடர் 110 இருசக்கர வாகனம் அறிமுகம்..!வாகனம் ஓட்டும்போது தேவைக்கேற்ப முறுக்குவிசையை வழங்கும் திறன் கொண்டதாகவும் இடவசதி மற்றும் மேம்பட்ட எரிபொருள் திறனாகிய சிறப்பு அம்சங்களுடன் நவீன தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் சிறப்பு அம்சங்களாக பாடி பாலன்ஸ் தொழில்நுட்பம்,இரண்டு ஹெல்மெட்கள் வைப்பதற்கான இட வசதியும், முன்பக்கம் எரிபொருள் நிரப்பு வசதியும், இன்ஃபினிட்டி லைட் பார், எமர்ஜென்சி பிரேக் எச்சரிக்கை, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் ப்ளூடூத் தொழில்நுட்பத்தினால் இயங்கும் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் செல்லும் இடம் உங்களுக்கான பாதை தெரிந்து கொள்ள உதவும் மேலும் வாகனம் எங்கு இருப்பதை அறிந்து கொள்வதற்கு உண்டான அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

இதையும் படிக்க  சாதனை படைத்த HERO MOTOR CORP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *