Sunday, April 20

த.வெ.க. முதல் மாநில மாநாடு வெற்றி மகளிர் அணியினர் கொண்டாட்டம்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தவெக கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும், மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

WhatsApp Image at AM
WhatsApp Image at AM

தவெக, தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் மாநாடு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலோடும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் அவர்களின் அறிவுறுத்தலோடும் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர மகளிர் அணி தலைவர் லதா தலைமையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி இந்த வெற்றி விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு மாவட்ட தொண்டர் அணி தலைவர் கிரிஸ் மாவட்ட மாணவரணி தலைவர் விஜய் பாலாஜி மற்றும் நிர்வாகிகளான அக்குபாய், தர்மராஜ், ட்யூன்ஸ், வெங்கடேஷ், நவீன், ராஜசேகர், முத்துவீரன், ஜில்லா சங்கர், ஸ்டீபன், அபினேஷ், சஞ்சய், ஆனந்தகுமார், மற்றும் மகளிர் அணியை சேர்ந்த ஜெயபாரதி, குஞ்சம்மாள், சிவரஞ்சனி, வெங்கலாத்தாள், சுதா,மஞ்சு நிஷா,சத்யா பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *