விக்கிபீடியா மீது ANI நிறுவனம் அவதூர் வழக்கு தொடர்ந்துள்ளது..

IMG 20240709 WA0009 - விக்கிபீடியா மீது ANI நிறுவனம் அவதூர் வழக்கு தொடர்ந்துள்ளது..

ANI செய்தி நிறுவனம் விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது அவதூறு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.

விக்கிப்பீடியாவில், “மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில், விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது, ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க  இந்தியாவில் PhonePe, Google Pay ஆதிக்கத்தை குறைக்க NPCI திட்டம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *