குரூப்-1: சான்றிதழ் பதிவேற்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் தேர்வர்களால் இன்னும் பதிவேற்றப்படாத சான்றிதழ்களை நவம்பர் 2-ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குரூப்-1 தேர்வில் தேர்வர்கள் சிலர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதது, அல்லது சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமலே விட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது,” என்று கூறியுள்ளார்.

தேர்வர்கள், தங்களது சான்றிதழ்களை நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து, தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலவரையறைக்குள் பதிவேற்றம் செய்ய தவறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  UPJEE 2024 நுழைவுச் சீட்டு வெளியீடு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

Tue Oct 22 , 2024
மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும் தென்னை சார் தொழில்களை வளரவும் ஏற்றுமதியை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் சென்னையில் உள்ள மண்டல தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைத்திட வேண்டும் தென்னையைத் தாக்கும் ஈரோ பைய்டு கருந்தாழை புழுக்கள் வேர்ப்புழு வெள்ளை ஈ கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்த […]
IMG 20241022 WA0014 - ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

You May Like