
OPENAI உடனான புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆப்பிள் தனது ஐபோன்கள், மேக்ஸ் மற்றும் ஐபாட்களில் சாட்ஜிபிடி பயன்படுத்துவதற்கு பணம் செலுத்தாது என்று Bloomberg நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. OPENAI யின் பிராண்ட் மற்றும் தொழில்நுட்பத்தை அதன் மில்லியன் கணக்கான சாதனங்களுக்கு அனுப்புவது பண கொடுப்பனவுகளை விட சமமான அல்லது அதிக மதிப்புடையது என்று ஆப்பிள் கூறுகிறது குறிப்பாக, ஆப்பிளின் தயாரிப்புகளில் சாட்ஜிபிடி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.