விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது…..

1669289523 9159 - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது.....

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, வாக்களிக்க அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்தினருடன்  வருகை தந்தவர் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார்.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.மேலும்,ஜூலை 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *