தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.

Screenshot 20240702 082025 WordPress - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.<br>


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கம். இதற்காக, ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுகிறது, அதாவது மக்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி சொந்த ஊர் செல்லவுள்ளவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதால், மக்கள் தயாராகி கொள்ள வேண்டும். இணையதளம் அல்லது ரயில் நிலையங்கள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *