அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோருக்கு வாழ்த்து மற்றும் பாராட்டை தெரிவிக்கும் விதமாக திமுகவினர் கொண்டாடினர்.
கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பணப்பட்டி தினகரன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், திமுக செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி உள்ளிட்ட ஆறுபடை வீடு முருக பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Leave a Reply