ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேட்டுப்பட்டி, ஆட்டாங்குடி, அகரப்பட்டி, கடப்பகார சத்திரம், கருவேப்பிலான்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்தவெளி ஜீப்பில் வேட்பாளர் கருப்பையாவுடன் சென்று வாக்குகளை சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய விஜயபாஸ்கர் ஒற்றை விரலால் ஓங்கி அடித்து எதிரிகளை விரட்டி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். 11 ஊராட்சிகளை சேர்த்து புதுக்கோட்டை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஊராட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோய் உள்ளது. எதிர்க்கும் ஊராட்சிகளை மாநகராட்சியாக இணைக்க கூடாது. அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது ஆகையால் நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் கருபையாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து
பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் கருப்பையா…
திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் நீங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள் என்று பொதுமக்கள் கேட்க வேண்டும். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை நாங்கள் சொல்லி வாக்குகளை கேட்கிறோம். இரட்டை இலைக்கு வாக்குகள் அளித்து என்னை வெற்றி பெற செய்தால் நீங்கள் கூப்பிட்டவுடன் ஐந்து நிமிடங்களில் நான் உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வந்து நிற்பேன் என்றார்.
Leave a Reply