Saturday, August 9

தமிழ்நாடு

போலீஸ், நக்சலைட் குழு இடையே பயங்கர துப்பாக்கி சூடு !<br>

போலீஸ், நக்சலைட் குழு இடையே பயங்கர துப்பாக்கி சூடு !

தமிழ்நாடு
போலீஸ், நக்சலைட் குழு இடையே பயங்கர துப்பாக்கி சூடு.நக்சலைட்டுகள் தப்பி ஓட்டம்.பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள், 28 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சிபிஐ மாவோயிஸ் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் நடத்திய எதிர் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.இந்த நிலையில் அந்த பகுதியில்   தீவிர சோதனை நடத்திய போலீசார் நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஆயுத குவியலை கண்டு பிடித்து அதில் இருந்த பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடி மருந்து...
சூலூரில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி வைத்த ஆளுநர்…

சூலூரில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி வைத்த ஆளுநர்…

தமிழ்நாடு
இந்திய விமானப்படை சார்பில், தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் முதல் கட்டம், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி, சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் ஸ்பெயின் ஆகிய 5 நாடுகளிலிருந்து 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, இன்று ஒரு ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். கவர்னர், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள், சிறிய ரக போர் விமானங்கள், மற்றும் ஆளில்லா போர் விமானங்களை பார்வையிட்டார். இன்று தொடங்கிய இந்த கண்காட்சி, ஆகஸ்ட் 15 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் 2 நாட்கள், ராணுவ தளவாட உற்பத்தியாளர்க...
கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கா அமைக்கும் பணி ஆரம்பம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கா அமைக்கும் பணி ஆரம்பம்

தமிழ்நாடு
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, இதில் காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளில் 20,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றின் கட்டுமானம் நடந்து வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பூங்காவில் நடைபயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள் மற்றும...
ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

தமிழ்நாடு
சென்னையில் டி.பி.சத்திரம் பகுதியில், ரெளடி ரோஹித் ராஜனை காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் கைது செய்துள்ளனர். தேனியில் கைது செய்யப்பட்ட ரோஹித் ராஜன், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு, ரோஹித் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரோஹித் ராஜன் இரு காவலர்களை அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்தார். இதற்கு எதிர்வினையாக, தற்காப்புக்காக காவல்துறையினர் ரோஹித்தை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த ரோஹித் ராஜன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ரோஹித் தாக்கிய இரு காவலர்களும் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ரெளடி ரோஹித் ராஜனுக்கு மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட மொத்தம் 13 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கத...
சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

தமிழ்நாடு
சுதந்திர தினம் மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் உள்ள விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மற்றும் பிற பகுதிகளிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையின் கிளாம்பாக்கம் மையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி 70 பே...
யானைகள் தினம் கொண்டாட்டம்…

யானைகள் தினம் கொண்டாட்டம்…

தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட   எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல்  யானைகளின்  சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளது  என அதன் முக்கியத்துவத்தை குறித்தும்,  பாதுகாப்பை உணர்த்தும் விதமாக  100கும் மேற்பட்ட பள்ளி  மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மாவட்ட வன அலுவலர் அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. யானைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள்  மூலம் கேக் வெட்கப்பட்டு, பின் யானைகளுக்கு ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்....
வேதாரண்யத்தில், கடன் தொல்லையால், தம்பதியர் உயிரிழந்த சோகம்…

வேதாரண்யத்தில், கடன் தொல்லையால், தம்பதியர் உயிரிழந்த சோகம்…

தமிழ்நாடு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமரேசன் (35), புவனேஸ்வரி(28) தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகியுள்ளது.  இரண்டு ஆண்டுகள் கடந்தும்   குழந்தை இல்லை என்ற ஏக்கமும், கடன் தொல்லை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மன உளைச்சலில் இருந்த இந்த தம்பதியினர், அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை பிடித்துள்ளனர். இதில் கணவன் மனைவி ஆகிய இருவர் உடல் மீதும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
சென்னையில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் கைது…

சென்னையில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் கைது…

தமிழ்நாடு
சென்னை பெருநகரில், கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நகரத்தில் தொடர்ச்சியாக குற்ற நடவடிக்கைகளை ஒழுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அருண். இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 01.01.2024 முதல் 11.08.2024 வரை, சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி, மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் உட்பட 133 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட 183 பேர், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற...
முதல் விமான சேவையை தொடங்கிய இண்டிகோ நிறுவனம் !

முதல் விமான சேவையை தொடங்கிய இண்டிகோ நிறுவனம் !

தமிழ்நாடு
அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று 11-8-2024 காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி  வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். இந்த விமானம் அபுதாபி - திருச்சி மார்க்கத்தில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது....
சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு…

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு…

தமிழ்நாடு
சேலம் அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் மட்டுமே பிறந்த ஆண் குழந்தை, மாஸ்க் அணிந்த பெண்ணால் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை கடத்திய அந்த பெண், சேலம் வாழப்பாடி அருகிலுள்ள காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என அடையாளம் காணப்பட்டார். தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு, கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர், மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை கைது செய்தனர். விசாரணையில், வினோதினிக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடியதாக தெரியவந்தது. அவர் குழந்தையை சிகிச்சைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்....