Sunday, July 13

கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…

கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்...

இந்த கூட்டம் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரவையின் கௌரவ ஆலோசகர்கள் சாந்தப்பன், அஜித்குமார், தலைவர் செந்தாமரை, நிறுவனர் கேரள விஸ்வநாதன், சேர்மன் டாக்டர் ரவீந்திரன், பொதுச் செயலாளர் சுதீஸ், பொருளாளர் பைங்கிளி சாஜில், இளைஞர் அணி செயலாளர்கள் அபிலாஷ், ராஜேஷ், சுசி, மகளிர் அணி பிரதிநிதிகள் சரிதா, விஜயலட்சுமி பிரிதீப் ஆகியோர்களுடன், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில:

நாராயண குரு ஜெயந்திக்கு தமிழக அரசு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் நாராயண குருவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறு பல்கலைக்கழக டாக்டர் பட்டத்திற்குரிய பாடமாக சேர்க்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையை புண்ணிய தலமாக அறிவிக்க வேண்டும்.

ஐந்தாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *