சென்னையில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் கைது…

jailee 1720283315 - சென்னையில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் கைது...

சென்னை பெருநகரில், கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நகரத்தில் தொடர்ச்சியாக குற்ற நடவடிக்கைகளை ஒழுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அருண். இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், 01.01.2024 முதல் 11.08.2024 வரை, சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி, மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் உட்பட 133 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட 183 பேர், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த 29 பேர், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 7 பேர், பாலியல் தொழில் நடத்தி வந்த 17 பேர், பெண்களை மானபங்கம் படுத்திய 5 பேர் மற்றும் உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் என மொத்தம் 838 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க  கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

கடந்த 05.08.2024 முதல் 11.08.2024 வரை, ஒரே வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *