கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, இதில் காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளில் 20,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றின் கட்டுமானம் நடந்து வருகிறது.
மேலும், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பூங்காவில் நடைபயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Leave a Reply