Friday, July 4

அரசியல்

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி…

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி…

அரசியல்
காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால் விவசாயிகள் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இடம் கோரிக்கை வைத்தனர், இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்க்கால்களை சீரமைத்தார். புதுவாத்தலை, ராமவாத்தலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் .. சென்ற மாதம் மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் தாங்காமல் தடுப்பண...
“அண்ணாமலைக்கு பதிலாக எச். ராஜா தலைமையில் பாஜக செயல்படும்; தமிழிசை சௌந்தராஜன்

“அண்ணாமலைக்கு பதிலாக எச். ராஜா தலைமையில் பாஜக செயல்படும்; தமிழிசை சௌந்தராஜன்

அரசியல்
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜெ.பி. நட்டா இன்று கோவை வந்து பாலக்காடு செல்கிறார். அவரை வரவேற்க முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அண்ணாமலை வெளிநாடு செல்லும் நிலையில், கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச். ராஜா தலைமையில் செயல்படுவதை மகிழ்ச்சியாகப் பார்க்கிறோம். ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்குடன், இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்" என அவர் தெரிவித்தார்.குழுவில் இடம் பெறாதது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அவர், "நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றுகிறேன். சுமார் நான்கரை ஆண்டுகள் ஆளுநராக செயல்பட்டேன். முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சி...
“போளூரில் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் 2ல் திறப்பு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு”

“போளூரில் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் 2ல் திறப்பு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு”

அரசியல்
போளூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழ் நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில், போளூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 2ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்....
அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நூதன போராட்டம்…

அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நூதன போராட்டம்…

அரசியல்
உதகையில் அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும் அதற்கு உண்டான ஒப்பந்தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் நூதன முறையில் வடையுடன் மாதிரி நகர மன்ற கூட்டத்தை நடத்தினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது....
திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….

திருச்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்….

அரசியல்
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (ச.ம.உ), திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் த. அன்பில் பெரியசாமி மற்றும் பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். இதற்கேற்ப, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், அண்ணாமலைக்கு அரசியல் தெளிவு இல்லை என்று குற்றம்சாட்டி, பாஜக அவரை அரசியல் கற்றுக்கொள்ள லண்டன் அனுப்புவதாகக் கூறினார். இதற்காக, திருச்சி பாஜக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக திருச்சி வழிவிடு வேல் முருகன் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியது மற்றும் அவருடைய உருவப்படத்தை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரு...
மத்திய அரசின் நிதி வழங்காததை எதிர்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு…

மத்திய அரசின் நிதி வழங்காததை எதிர்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு…

அரசியல்
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே நிதி வழங்குவதாக கூறுகிறது. ஆனால், "மத்திய அரசு 'அனைவருக்கும் கல்வி' என்ற கொள்கையை நாங்களும் கூறுகிறோம், நீங்கள் சொல்கிறீர்கள்; இதற்கும் மத்திய அரசு நிதியை வழங்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார். அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாயும், கடந்த ஆண்டு வரவேண்டிய 249 கோடியும் பெறப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நிதி வழங்க...
இபிஎஸ் குறித்த சர்ச்சை அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு…

இபிஎஸ் குறித்த சர்ச்சை அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு…

அரசியல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அண்ணாமலையின் உருவபொம்மை கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அருகே எரிக்கப்பட்டது. அண்ணாமலையின் பேச்சை எதிர்த்து, அதிமுக தொண்டர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அண்ணாமலையின் பேச்சு, எடப்பாடி பழனிசாமி குறித்த அவதூறு கருத்துக்கள் மற்றும் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. முந்தைய நிகழ்வில், பாஜக தலைவர் அண்ணாமலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, “தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகா...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

அரசியல்
மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் பிரதான நோக்கம். இந்தக் கூட்டிணைவிற்கான ஒதுக்கீடு முடிவுகளை சிறப்பாக எடுக்க, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை விவரங்கள் அரசுக்கு அவசியம் தேவை,” என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர், அரசுத் துறைகளின் செயலாளர் பதவிகளுக்கான நேரடி நியமனம் ('லேட்டரல் என்ட்ரி') பற்றிய தனது எதிர்ப்பையும் அவர் வெளியிட்டிருந்தார். இப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்....
நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்த  தமிழகம் முழுவதும் சீமான் சுற்றுப்பயணம்…

நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சீமான் சுற்றுப்பயணம்…

அரசியல்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 8.19 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் மூலம், கட்சி தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும், திமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு அடுத்த 3-வது பெரிய கட்சியாக போட்டியிட்டது. தற்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஒரு பகுதியாக, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யும், மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மாவட்ட வாரியாக கலந்தாய்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல்கட்டமாக, அவர் நாகப்பட்டி...