திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

IMG 20240829 WA0009 - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.

இதற்கேற்ப, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், அண்ணாமலைக்கு அரசியல் தெளிவு இல்லை என்று குற்றம்சாட்டி, பாஜக அவரை அரசியல் கற்றுக்கொள்ள லண்டன் அனுப்புவதாகக் கூறினார்.

இதற்காக, திருச்சி பாஜக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக திருச்சி வழிவிடு வேல் முருகன் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியது மற்றும் அவருடைய உருவப்படத்தை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே கூடுதலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உருவப்படத்தை எரித்ததில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  370-வது சட்டப்பிரிவு பாகிஸ்தானில் புதைக்கப்பட்டது:பிரதமர் மோடி

இந்த போராட்டம் காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *