Friday, July 4

அரசியல்

ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ…

ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ…

அரசியல்
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மேலும் கவிதா தங்களை ஜாதி பெயரை குறிப்பிட்டு இழிவுப...
ராகுல் காந்தி மீது அவதூறு பேச்சு: பாஜக தலைவர்கள் மீது  காங்கிரஸ் புகார்

ராகுல் காந்தி மீது அவதூறு பேச்சு: பாஜக தலைவர்கள் மீது  காங்கிரஸ் புகார்

அரசியல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு பேசிய பாஜக முக்கிய தலைவர்கள் மீது 11 காவல் நிலையங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மக்களவை கூட்டத்தில் ஆற்றிய உரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேசவிரோதி எனவும், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு அவரை பயங்கரவாதி எனவும் கூறினர். மகாராஷ்டிராவில் ஏக்நாத் கட்சியை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ₹11 லட்சம் பரிசு அறிவித்தார். உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் ராகுல் காந்தியை நாட்டின் "நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று கூறினார். மேலும், பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மர்வா, "இந்திரா காந்தி...
“தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

“தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

அரசியல்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் "தொண்டர் எழுச்சி பெருவிழா" திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து வாகனப் பேரணியாக வந்து ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, ராமகிருஷ்ணா பாலம் அருகில் மற்றும் மஜக மாவட்ட அலுவலக வாசலில் கட்சியின் கொடியேற்றபட்டது. இறுதியாக பாலக்கரை மதுரை ரோடு பகுதியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளர் வல்லம் அஹமது கபீர், மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் தாம்...
பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் மனு..

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் மனு..

அரசியல்
திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவை சேர்ந்த தர்விந்தர்சிங்மர்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்திக்கு எதிராக வெளிப்படையாக மிரட்டல் விடுத்தும், எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட நிலைதான் நீங்களும் சந்திக்க நேரிடும் என மிரட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவரை பயங்கரவாதி என தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜகவில் கூட்டணியில் சேர்ந்த எம்எல்ஏ சஞ்சய் கைவர்ட், ரயில்வே இணை அமைச்சர் ரவனித்பிட்டு, உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜுசிங், தமிழகத்தை சேர்ந்த தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து ராகுல் காந்திய...
தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி: கனிமொழி எம்.பி. கருத்து

தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி: கனிமொழி எம்.பி. கருத்து

அரசியல்
தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். கனிமொழி எம்.பி. பேசும்போது, “பா.ஜ.க. அரசு 'ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி' போன்ற கோஷங்களை கொண்டு வருகிறது. இதன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை குறைக்க முயற்சிக்கிறது,” என்று விமர்சித்தார். அவரது கருத்தில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற புதிய யோசனையின் மூலம் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும், பா.ஜ.க. அரசு இதன்மூலம் தனக்கு மட்டுமே நன்மை கிட்டும் வகையில் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அதன் பதவிக்காலம் முடிவுக்கு வராத நிலையில் இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தால் என்ன செய்யப்படும் என்பதில் பா.ஜ.க. யோசிக்கவில்லை எனவும் அ...
“கோவையில் 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு நிலம் தானமாக அளித்த எஸ்.பி. வேலுமணி”

“கோவையில் 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு நிலம் தானமாக அளித்த எஸ்.பி. வேலுமணி”

அரசியல்
கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்டிலி வழங்கி வருகிறார். அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில். இடத்தின் பத்திரத்தை தற்பொழுது பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி....
கோட்டூர் பேரூராட்சி  கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு.

கோட்டூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு.

அரசியல்
பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது, பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுகவை சேர்ந்த பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பேரூராட்சியின் தலைவர் ராமகிருஷ்ணன் தன்னிசையாக செயல்பட்டு ஊழல் செய்து வருவதாக கூறியும் ,சரியான முறையில் வரவு செலவு கணக்குகள் காட்டுவதில்லை, பேரூராட்சிக்கு மக்கள் நல பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதியில் ஊழல் செய்வதாகவும் கூறி திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தனர். இதனால் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் வரி என்கின்ற பெயரில் அதிகமாக வசூல் செய்து குறைவாக கணக்கு காட்டுவதாகவும் ,அரசு கொடுக்கும் நிதியை முறை...
பொள்ளாச்சியில் திமுக பொதுக்கூட்டம்: வரவிருக்கும் தேர்தல் வெற்றிக்காக முக்கிய ஆலோசனைகள்..

பொள்ளாச்சியில் திமுக பொதுக்கூட்டம்: வரவிருக்கும் தேர்தல் வெற்றிக்காக முக்கிய ஆலோசனைகள்..

அரசியல்
திருப்பூர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையிலான வழிகாட்டுதலுடன் திமுக ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான களப்பணி பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், அதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல...
கோவை மாணவ மாணவிகளிடம் ஜாதி மதம் கேட்கும் தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மனு…

கோவை மாணவ மாணவிகளிடம் ஜாதி மதம் கேட்கும் தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மனு…

அரசியல்
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சில தனியார் பள்ளிகள், மாணவ, மாணவியர்களின் விபரக் குறிப்பேட்டில் சாதி மற்றும் மத விவரங்களை நிரப்ப அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து, முற்போக்கு இயக்கத்தினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோரிடமும், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் இதுகுறித்து முறையிடப்பட்டது. சமூக சமத்துவம் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால், மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு அல்லது சுய விவரப்படிவங்களில் சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என்று அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் உள்ள பீளமேடு பி.எஸ்.ஜி மெட்ரிகுலேசன் பள்ளி, சித்தா புதூர் பி.ஆர்.சித்தாநாயுடு ம...
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்…

அரசியல்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஷரீப் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கிளை கட்டமைப்புகள் மற்றும் மாவட்டத்தில் வரவிருக்கும் முப்பெரும் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இவ்விழாவில் தலைவர் மு. தமிமுன் அன்சாரி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) பங்கேற்க உள்ளார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....