ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி…

IMG 20240901 WA0008 1 - ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் - எம்எல்ஏ பழனியாண்டி...

காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால் விவசாயிகள் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இடம் கோரிக்கை வைத்தனர்,

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்க்கால்களை சீரமைத்தார்.

img 20240901 wa001014461770621688560732 - ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் - எம்எல்ஏ பழனியாண்டி...

img 20240901 wa00096018141441140292650 - ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் - எம்எல்ஏ பழனியாண்டி...

புதுவாத்தலை, ராமவாத்தலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ..

சென்ற மாதம் மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திறந்து விடப்பட்ட இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் தாங்காமல் தடுப்பணைகள் சேதமடைந்தது.

இதன் காரணமாக 5000 ஏக்கர் நில பாசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிக்க  திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து சேதமடைந்த தடுப்பணைகளை மணல் மூட்டை வைத்து தடுத்து புதுவாத்தலை , ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் தேக்கி வைத்திருக்கிறோம். இந்த தகவலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில்
தடுப்பணைகள் நிரந்தரமாக கட்டித்தர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை எல்லா வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *