போளூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழ் நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில், போளூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 2ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.