கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து மிகப்பெரிய அளவில் கரும்புகை வெளியேறி, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Leave a Reply