Saturday, July 5

பொள்ளாச்சியில் திருச்சி சிவா: உயிர்காக்கும் மருந்துகளின் விற்பனையில் இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டுவதாக குற்றச்சாட்டு …

பொள்ளாச்சியில் திருச்சி சிவா பேட்டி அளித்தார், அப்போது உயிர்காக்கும் மருந்துகள் விற்பனையில் இடைத்தரர்கள் அதிக லாபம் ஈட்டுவதாக கூறினார்.பெருமதிப்பிற்குரிய மனைவிமார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, கணவன் மனைவி உறவின் நெருக்கத்தை உணர்த்தும் விதமாக, கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் ஒரே நேரத்தில் மலர்கொத்து பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட திருச்சி சிவா, “மாண்புமிக்க மனைவி” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருதயம் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளதால், ஏழை மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைக் கண்டறிய, பாராளுமன்ற குழுவினர் சிறப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கான வரி அதிகரிக்கப்படுவது, மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மருந்துகளுக்கு சலுகை வழங்கப்படாதது, இதனால் நோயாளிகள் அதிக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், மருந்துகள் நோயாளிகளுக்குக் கிடைப்பதற்கு இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளின் போட்டிகள்: கார்மல் கார்டனில் வைர விழா அனுசரணையில் தொடக்கம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *