போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் முதல்முறையாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அதிகாரிகள் கூறியதாவது:சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அந்த விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் கூறினா்.முன்னதாக, விண்வெளி வீரா்களுடன் ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் வரும் 26-ஆம் தேதி பூமிக்குத் திரும்பவதாக இருந்தது.இந்தச் சூழலில், அவா்கள் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அந்த விண்வெளி ஓடத்தின் சோதனை ஒட்டமும் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது அது பூமிக்குத் திரும்புவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.