கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததினால், உபரி நீரை வெளியேற்றுவதற்காக குளத்தில் உள்ள மதகுகள் திறக்கப்பட்டன. இந்த நடவடிக்கை, அதிக மழையால் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வின் விளைவாக குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் இதனை நேரில் சென்று பார்வையிட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பெரிய குளத்திற்கு நீரை செலுத்தி வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான இந்த […]

பொள்ளாச்சியில் வாசவி இன்டர்நேஷனல் கிளப் சார்பில் 1 கோடி விதை பந்துகள் தயாரிப்பு விழிப்புணர்வு. பொள்ளாச்சியில் வாசவி இன்டர்நேஷனல் கிளப்பின் உறுப்பினர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில், சுமார் 1 கோடி விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போதைய கால சூழ்நிலை மற்றும் அதிக ரோடு விரிவாக்கம், வீட்டு மனைகளின் விரிவாக்கம் காரணமாக மரங்கள் பெரிதும் காயம் அடைந்துள்ளன, இதனால் வெயிலின் அளவு […]

நீலகிரி மாவட்டம், ஊட்டி:மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருச்சி:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான 53வது தேசிய மகளிர் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்று திருச்சி அணி திரும்பியதற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் உள்ள 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன. திருச்சி கேந்திரிய வித்யாலயா அணி சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் […]

பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று பள்ளியில் இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் […]

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிள் முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 2024 25 ஆம் கல்வி ஆண்டிற்கான 27 ஆவது துவக்க விழா இன்று நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் NIA கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீ ராமசாமி விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் வரவேற்றார். NIA கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் மகாலிங்கம் அவர்கள் […]

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் பிளாஷ் தொடர் 8 மாணவர்கள் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தொழில் மற்றும் தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்தவும் புதிய நெறிமுறைகள் கையாளுவதற்கான அணுகுமுறைகளை விவரிக்கும் வகையில் தேசிய கருத்தரங்கு கடந்த மூன்று நாட்களாக கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் […]

இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகாரி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது Sub Lieutenant (SSC-Executive(IT) Entry-2024) பதவிக்கானது. மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளன. **வயது வரம்பு:** 2.1.2000 முதல் 1.7.2005 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். **தகுதி:** – CSE, IT, Software Systems, Cyber Security, Networking, Data Analysis போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். – கணினி அறிவியல் […]

மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் இதனைப்பற்றி பதிவிட்டுள்ளார். “மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி சில கட்டுப்பாடுகளுடன் கூடியது. அந்தப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதால், இப்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து, மீண்டும் முழு உழைப்புடன் அரசியலுக்கு திரும்ப உள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “பிரதமரின் நீண்டநிலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் எனது முயற்சியில், வதந்திகள் பரப்புபவர்கள் இனி […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பேரூராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் காமராஜர் நகர் என உருவாக்கி சுமார் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இருளர் மற்றும் அருந்ததிய சமுதாய மக்களுக்கு புள்ளம்பாடி பேரூராட்சியில் வீட்டு வரி ரசீது,குடிநீர்,மின்சாரம் மற்றும்  வருவாய்த்துறை தடையின்மைச் சான்று வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை […]