பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று பள்ளியில் இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச .தர்மராஜ் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் இரா .சித்ராதேவி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜெய்லாபுதீன். குமரன் நகர் காளிமுத்து.கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம்.மற்றும் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் தின விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி. கேத்தரின் சரண்யா மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியும் . மரக்கன்றுகள் வழங்கியும் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சார் ஆட்சியர் பேசும்போது … ஒவ்வொரு மாணவிகளும் அரசு வழங்கும் பல்வேறு விதமான கல்வி சார்ந்த திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும் உள்ளிட்ட பல கருத்துகளை மாணவிகளிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து நகராட்சித் தலைவர் பேசும்போது…. ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற மாணவிகளை சந்திக்கும் போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்றும் …இங்கு உள்ள அனைத்து மாணவிகளுமே கல்வியை நல்ல முறையில் படித்து ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு வேலைக்கு சென்றே ஆக வேண்டும் .அந்த லட்சியத்தை முன்னிறுத்தியே உங்களது கல்வியை தொடர வேண்டும் என பேசினார் …
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கந்த மனோகரி .கவிதா மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார் .
Leave a Reply