திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் பிளாஷ் தொடர் 8 மாணவர்கள் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தொழில் மற்றும் தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்தவும் புதிய நெறிமுறைகள் கையாளுவதற்கான அணுகுமுறைகளை விவரிக்கும் வகையில் தேசிய கருத்தரங்கு கடந்த மூன்று நாட்களாக கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் வயதான பெண் மூளையில் ஏற்படும் மொழி கோளாறுகளில் கற்றல் யுக்திகளை பயன்படுத்துவது குறித்தும் இரண்டாவது நாள் பல்வேறு மூளை மொழி கோளாறுகள் குறித்தும் மூன்றாம் நாள் பேச்சு மொழி கோளாறுகளுக்கு செயல் விளக்கம் கொடுப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிப்பு மிக்க எண்ணங்களை பகிர்ந்து கொண்டதோடு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும் பொது விழிப்புணர்வு முக்கியத்துவம் குறித்தும் அபிஷியா சிகிச்சை மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து பேசினார்.
நிறைவு நாளான இன்று திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வுக்கு வாய்மொழி மற்றும் போஸ்டர் பிரிவுகளில் 52 ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்பட்டது அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உதவி பேச்சு மற்றும் மாற்றுத் தொடர்பு மாதிரி மூளை மாதிரி பாஷைகள் விளையாட்டு குறும்படங்கள் மற்றும் ரிலீஸ் ஆகியவை நடத்தப்பட்டது ஒவ்வொரு பிரிவிலும் கலந்து கொண்டவர்கள் தங்களது விருதுகளை சிறப்பு விருந்தினர் அருட் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி வழங்கினார். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் பேச்சு மொழித்துறை தலைவர் டாக்டர் சுந்தரேசன் செய்திருந்தார் இந்த கலந்தாய்வில் சென்னை கோயம்புத்தூர் திருநெல்வேலி மதுரை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா பெங்களூர் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 270 மாணவர்களும் 60 பேச்சு பயிற்சி வல்லுனர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply