Thursday, July 3

இந்திய கடற்படையில் வேலை…

இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகாரி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது Sub Lieutenant (SSC-Executive(IT) Entry-2024) பதவிக்கானது. மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளன.

**வயது வரம்பு:** 2.1.2000 முதல் 1.7.2005 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

**தகுதி:**
– CSE, IT, Software Systems, Cyber Security, Networking, Data Analysis போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
– கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்தவர்கள் மற்றும் எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

**தேர்வு செய்யப்படும் முறை:**
விண்ணப்பதாரர்களின் பி.இ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி., எம்சிஏ, எம்.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது தொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

**பயிற்சி:**
தேர்வாகுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலா கடற்படை பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி ஜனவரி 2025 இல் தொடங்கும்.

இதையும் படிக்க  திருச்சி கேந்திரிய வித்யாலயா மகளிர் ஹாக்கி அணி தேசிய அளவில் தங்கம் வென்று திரும்பியதற்கு உற்சாக வரவேற்ப்பு !

**விண்ணப்பிக்கும் முறை:**
www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 16.8.2024 ஆகும்.

**முன்னுரிமை:**
என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

**நேர்முகத் தேர்வுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *