Tuesday, January 21

வீட்டு வரி ரசீது,குடிநீர்,மின்சாரம் மற்றும்  வருவாய்த்துறை தடையின்மைச் சான்று வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பேரூராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் காமராஜர் நகர் என உருவாக்கி சுமார் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இருளர் மற்றும் அருந்ததிய சமுதாய மக்களுக்கு புள்ளம்பாடி பேரூராட்சியில் வீட்டு வரி ரசீது,குடிநீர்,மின்சாரம் மற்றும்  வருவாய்த்துறை தடையின்மைச் சான்று வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் Pதமிழ்ச்செல்வன்,
Tநாகராஜ், PVவினோத்குமார்,
செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,போராட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் மாநில பொருளாளர் Aபழனிச்சாமி, சிபிஐஎம் ஒன்றிய செயலாளராக Tரஜினிகாந்த் உள்ளிட்ட  நிர்வாகிகள்  பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள். பின்னர் புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன்,லால்குடி  மண்டல துணை வட்டாட்சியர் லோகோ மற்றும் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார்,விவசாய தொழிலாளர் சங்கநிர்வாகிகள்  உள்ளிட்டோர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.முடிவில் வருவாய்துறை அதிகாரி காமராஜர் நகரில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களுக்கு திருச்சிமாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து விரைவில் உரிய மின்இணைப்பு வழங்குவது எனவும்,பகுதிவாழ் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி வீட்டுவரி,குடிநீர் வரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மனுக்கள் அளித்து உரிய முறையில் பெற்று கொள்வது என பேசி முடிக்கப்பட்டது.இதனை விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க  Local High School Robotics Team Wins National Championship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *