Saturday, August 2

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அகழ்வாய்வில் கலப்பை கொழுமுனை கண்டுபிடிப்பு….

கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அகழ்வாய்வில் கலப்பை கொழுமுனை கண்டுபிடிப்பு….

தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள், சூடு மண்ணால் ஆன முத்திரைகள், சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.292 கிலோ, நீளம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, மற்றும் தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாய பணியில் ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.தொல்லியல் சூழ்நிலைகளைப் பொருத்து, இவை இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை என கணிக்கப்படுகிறது....
குழந்தையை சுற்றி வளைத்த தெரு நாய்கள்: இமைப்பொழுதில் காப்பாற்றிய தந்தை :  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

குழந்தையை சுற்றி வளைத்த தெரு நாய்கள்: இமைப்பொழுதில் காப்பாற்றிய தந்தை :  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

தமிழ்நாடு
கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தனது மகனை இறக்கி விட்டு, விட்டு வீட்டுக்குள் சென்றார்.அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெரு நாய்கள் குழந்தையை நோக்கி ஓடி வந்து உள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்று உள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைத்தது. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன்  கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டு இருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கு இருந்து தெரு நாய்கள் வந்த வேகத்தில் திரும்பின. இந்த  காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் சிறுவன் நான்கு தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், இமை பொழுதில் தெரு நாய்கள் ச...
திருச்சி காவிரியாற்றில்<br>முதலைகள் நடமாட்டம் !

திருச்சி காவிரியாற்றில்
முதலைகள் நடமாட்டம் !

தமிழ்நாடு
திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி சிந்தாமணி காவிரிப்பாலம் பகுதியில், ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் இரு முதலைகள் படுத்திருப்பதை சிலர் கண்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்றவர்கள் அவற்றை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.இதற்கிடையில் காவிரி பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து, கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.இந்த நிலையில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த பொழுது முதலை நடமாட்டம்இருப்பது தெரிய வந்தது.ஆனால் இரவு நேரமானதால் முதலையை பிடிக்க முடியவில்லை.இ...
சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்….

சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்….

தமிழ்நாடு
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டனைகள் கடுமையாக்கப்படும் என அறிவித்த நிலையில், மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி, விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும், கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமையற்ற இடங்கள் மூடப்பட்டு சீலிடப்படும். தண்டனை பெற்ற ஒருவரை அந்த பகுதியில் இருந்து நீக்குவதற்காக, மதுவிலக்கு மற்றும் புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்யு...
ஆண்டிபட்டி அருகே விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆண்டிபட்டி அருகே விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாடு
தேனி மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருளின் புழக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும் தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக இருப்பதால் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.மேலும் கம்பம்,வருசநாடு உள்ளிட்ட பகுதிகள் கஞ்சா விற்பனை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகளில் சிக்கிய வருசநாடு அருகே உள்ள குமணன் தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் செல்போன் எண்ணை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்ததில்,ஆந்திராவில் இருந்து வருசநாடு பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படும் தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள தேவராஜ் நகர் என்னும் பகுதியில் கடமலைக்குண்டு போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை ஜிபிஎஸ் சிக்னல் மூலம் கண்டறிந்...
அதிமுக நிர்வாகி கைது…..

அதிமுக நிர்வாகி கைது…..

தமிழ்நாடு
சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது கடந்த காலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளிள் இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டும் உள்ளார். இவர் அஇஅதிமுக விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்தவர். தற்போது அஇஅதிமுக உறுப்பினராக உள்ளார்.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டாரத்தில் கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் சுரேஷ் சமீப காலமாக சாராயம் காய்ச்சி விற்று வந்தது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாராயம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்த...
தமிழக மீனவர்கள் கைது!<br>

தமிழக மீனவர்கள் கைது!

தமிழ்நாடு
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். அத்துடன் மீனவர்களின்  விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடம் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, இலங்கை கடற்படை மீனவர்கள் படகை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது, மீனவர்களின் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், படகு வேகமாக மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும்...
திருச்சியில் சௌராஷ்டிரா வாலிபர் சங்கத்தின் முப்பெரும் விழா – மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது!

திருச்சியில் சௌராஷ்டிரா வாலிபர் சங்கத்தின் முப்பெரும் விழா – மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது!

தமிழ்நாடு
திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் சகோதர சங்கங்களின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி நடுகுஜிலி தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர் JJ.மகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் BJ.ஹரிநாத் வரவேற்புரையாற்றினார். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராகதஞ்சாவூர் கலைமாமணி தேவநாத இராமானுஜ தாஸர் மற்றும் வீர ராகவன் ஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்களை வழக்கறிஞர் S.சுதர்சன் வழங்கினார். 100 மாணவர்களுக்கு 1 லட்சம் கல்வி ஊக்கபரிசுகளை அங்கியா AT சம்வித்யா தேவி அறக்கட்டளை நிர்வாகி துளசிராமன், ரமேஷ்பாபு குடும்பத்தினர்கள் வழங்கினர். மேலும் திருச்சி மாவட்டத்தில் SSLC, +2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு நினைவுகேடயம் மற்றும் ஊக்க பரிசுகள...
மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைப்பு!

தமிழ்நாடு
மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று(ஜூன் 23) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.17 அடியிலிருந்து 40.93 அடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக   திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1500 கன அடியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 140 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.57 டிஎம்சியாக இருந்தது. மழையளவு 18.4 மி.மீ....
கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 19-ஆம் தேதி 21 பேரும், ஜூன் 20-ஆம் தேதி 20 பேரும், 21-ஆம் தேதி 9 பேரும் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் கள்ளக்குறிச்சியிலும், ஒருவர் சேலத்திலும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் 106 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என மொத்தம் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த...